இசை ராஜா இளையராஜா
![](https://eluthu.com/images/loading.gif)
பண் வேந்தனின் ராகங்கள்
பருகப்பருக தணியா தாகங்கள்
பறக்கடிக்கும் ரோகங்கள்
இளையராஜாவின் கீதங்கள்
இதயம் தீண்டும் மோகங்கள்
இனிமை தூண்டும் சுகங்கள்
இவர் இசையமைத்த பண்கள்
இசை ஆராய்ச்சிக்கு பாடங்கள்
வருந்துகின்ற உள்ளங்களை
வருடுகின்ற இவரின் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஆழ்மன தேடல்கள்
தமிழ் இசைப் பாடி
தமிழ் இசையப் பாடி
ராகங்களின் ரகம் தேடி
தாளங்களின் லயம் கூடி
நவரசம் இழையோடி
நல்லிசை நவின்றாடிய
இன்னிசை சாகரம்
இவரிசை சாகா வரம்
பாமரனுக்கு சாமரம்
பரமனுக்கும் பாயிரம்.
சிம்போனி சென்று
மேஸ்ட்ரோ வென்று
சீரிய புகழ் கண்ட
சின்னத்தாயின் புதல்வனே
திரை இசைக்கு முதல்வனே
வெண்பா முனைபவனே
பண், பா, பதமிசைக்கும் பாவலனே
காவியும் கட்டி காவியம் படைத்த
நீயொரு இசை ஓவியம்
உலகுள்ளமட்டும் உ ன்னிசை ராஜ்யம்.
சில சொற்களுக்கான பொருள்:
பண் - இசை
பா - செய்யுள்
பதம் - பாடல்
ரோகங்கள் - நோய்கள்
சாகரம் - கடல்
சாமரம் - கவரிமான் ரோமத்தாலான மன்னர் காலத்து விசிறி.
பாயிரம் - கடவுள் வாழ்த்து பாடல்