மாலையில் காலையில் மாலை

மாலைக்கு மாலையில் மாலையின் கழுத்தினில்
மாலை இட்டது மாலையெழில் வானவில்
மாலையில் வந்த காதலன் கழுத்தில் காதலி
பூங்கை வளைத்து புன்னகையில் மாலை இட்டாள்
காலைக்கதிர் வந்து கரம்பிடித்துக் கொடுக்கக் காதலன்
சோலையெழிலினியின் கழுத்தினில் பூமாலையிட்டான் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-19, 10:34 am)
பார்வை : 82

மேலே