பெருக்கல்-வாழ்வில்

இரு உள்ளங்கள் சேர்ந்தாள்
காதல் பெருக்கு
ஆடியில் நீர் பெருகி ஓடிவர
காவேரியில் ஆடிப் பெருக்கு
அதைக் காண மக்கள் பெருக்கு
ஆனந்தப் பெருக்குஅங்கே
பருவ மழைப் பெய்திட
குற்றால அருவியில் ஐந்தருவியும்
பொங்கி விழ அருவியில் நீர் பெருக்கு
சுற்றுலா மக்கள் உள்ளத்தில்
உவகை, உற்சாகப பெருக்கு
அசுத்தம் போக்க இல்லத்தில்
பெருக்கல் சுத்தம் ஆனது வீடு
குழந்தைப் படித்தது 'சுத்தம்
சோறு போடும்' என்ற அவ்வை வாக்கு
தாயின் உள்ளம் அன்பின் ஊற்று
அதை அறிந்துகொண்டால் பிள்ளைகளே
இல்லம் எங்கும் அன்பின் பெருக்கே
அன்னையவள் சிறுக சேர்த்து Selvam
பெருக்கிட வந்த இலக்குமி
அன்பைப் பெருக்கி நாம் வாழ்ந்திட்டால்
எங்கும் அமைதி,நிம்மதிப் பெருக்கு
இப்படி நல்லதைக் கண்டு,நல்லதை நாடி
நல்லதையே செய்து வாழப் பழகின
எல்லாம் இன்ப மயம் நன்மைப் பெருக்கில்,
இப்படி பெருக்கல் வாழ்வின் அர்த்த
சூத்திரம் அறிந்து வாழ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Aug-19, 12:16 pm)
பார்வை : 72

மேலே