தூவினாள் காதல் மழை


இதழ்களில் அவள் செம்மை
தீட்டினாள் ரோஜா பூவினால்
இளம் குயிலின் புது ராகம்
மீட்டினாள் அவள் நாவினால்
எழில் மயிலின் ஆடையை
காவினாள் உடல் எங்கும்
காந்த விழிகளால் எனக்கு
கூறினாள் கதைகள் பல
தாவினாள் நெஞ்சிலே அவள்
தூவினாள் காதல் விதை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (20-Aug-19, 2:50 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 184

மேலே