என் மனைவி

என் மனைவி

வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தவள்.
புரியாத சில புதிர்களுக்கு விளக்கம் அளித்தவள்.
திசை அறியா மேகமாக திரிந்த எனக்கு
நான் மழை மேகம் என உணர்தியவள்.
என்னுள் என்ன திறமை என கண்டறிந்தவள்.
என் திறன் அனைத்தும் வெளிபடுத்தியள்.
என் வாழ்க்கையின் திசை தனை தீர்மானித்த தீபகற்பம் அவள்.
என் வாழ்வில் புது வசந்தம் அவள்.
தென்றலாக தினம் என்னை தாலாட்டுபவள்.
என் வீட்டு குத்து விளக்கு அவள்.
இருள் சூழ்ந்து என் ஆரம்ப வாழ்வின் அனையா ஒளிவிளக்காய் அமைந்தவள்.
என் வாழ்வில் நான் தினம் கானும் வெற்றியின் ரகசியம் அவள்.
என் வீட்டு மகாலட்சுமி அவள்.
நான் காதலிக்க அவள் எனக்கு நல்ல காதலி.
எனக்கு பணிவிடை செய்வாள் நல்ல மனைவியாய்.
என் பணியின் சந்தேகம் தீர்ப்பாள் நல்ல காரியதரசியாய்.
என்னை கருனையுடன் அரவனைபாள் அன்புள்ள தாயாய்.
நான் தினம் சுவாசிக்கும் மூச்சு அவள்.
என் உயிர் அவள்.
அவள் மடியில் தான்
என் உயிர் பிரிய வேண்டும் என
தினம் அந்த ஆண்டவனிடம் பிராத்தனை செய்யும் என் இதயராணியின் அன்பு கணவன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Aug-19, 3:40 pm)
சேர்த்தது : balu
Tanglish : en manaivi
பார்வை : 199

மேலே