கண்ணனை வணங்கு மனமே

கூப்பிடும் போது அன்போடு மனதில்
கண்ணனை இருத்தி ஒருமுறையேனும்
உண்மையாய்க் கூவி அழைத்தால் நம் முன்னே
தப்பாது வந்து நிற்பான் கண்ணன்
நண்பனாய், நல் நாயகனாய், சேவகனாய்
கொஞ்சும் மொழிபேசும் குழவியாய் ஏன்
சிலர் இல்லை இவன் என்றே வீம்பாய்க்
கூறி நிற்க , நம்முன் கண்ணபெருமானாய்
குழலூதும் கண்ணனாய், கையில் சங்குடன்
ராதா சியாமளனாய் நம்மையெல்லாம் காக்கும்
கருணாகரனாய் ஜெகத்ரட்சகனாய் இன்னும் ஏன்
அவன் பாதம் தஞ்சமடைய தாமதம்
வாருங்கள் இன்று அவனுக்கு ஜெயந்தி
கிருஷ்ணா கிருஷ்ணா பரந்தாமா என்று
மனமுருகி வந்திப்போம் தலை வணங்கி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Aug-19, 4:25 pm)
பார்வை : 114

மேலே