பலரிடம் உள்ளது
வட்டார அதிகாரிக்கு
வந்த கடிதத்துடன்—பணம்
அய்ம்பதினாயிரம் ரூபாயும்
அதில் இருந்தது,
“வருமானவரி ஏய்ப்பால்
உறக்கம் வரவில்லை—அதனால்
இப்பணத்தைத் தங்களுக்கு
அனுப்பியிருக்கிறேன்” என்று
எழுதப்பட்டிருந்தது
‘மீண்டும் தூக்கம் வராவிட்டால்
மீதித் தொகையையும்
உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
என்று எழுதியிருந்தது’
சிறிய குற்றதை அறிக்கை விட்டு
அதன் மூலம் பெரிய குற்றத்தை
மறைத்து வைக்கும் திறமை
மக்களில் பலரிடம் உள்ளது