கிருஷ்ண ஜெயந்தி

சின்ன சின்ன கண்ணா - என்
சிங்கார கண்ணா

கோகுலத்துக் கண்ணா - அந்த
கோதைக்கேற்ற கண்ணா

வெண்ணெய் திருடும் கண்ணா - கரு
நீலவண்ணக் கண்ணா

மண்ணை தின்னும் கண்ணா - வாயில்
பூவுலகை காட்டும் கண்ணா

சேட்டை செய்யும் கண்ணா
சிட்டாய் பறக்கும் கண்ணா

மழலையாலே கண்ணா - மெல்ல
குழலை ஊதும் கண்ணா

தாயை காக்கும் கண்ணா - பல
மாயம் செய்யும் கண்ணா

கோமாதா காக்கும் கண்ணா - பல
கோபியரை கவரும் கண்ணா

மாயவனே கண்ணா - அந்த
மாமனை வதைக்கும் கண்ணா

எழுதியவர் : பரிதி காமராஜ் (23-Aug-19, 8:30 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 185

மேலே