கருப்பு ரோசா
அவனும் அவளும்
ஈருடல் ஓருயிரான காதலர்கள்
பிறர் கண்களுக்கு அவன்
கீழ் ஜாதி மகன், அவள்
உயர் ஜாதிப் பெண்
காதலர்கள் அவர்கள் இதற்கெல்லாம்
அப்பாற்பட்டவர்கள்
அவர்கள் காதல் மண மேடைப்போகும் மம்
இந்த'பிறரால்' அவர்கள் இருவரும்
அழிக்கப்பட்டு , ஒரே இடத்தில்
அவர்கள் பூத உடல் புதைக்கப்பட்டது
பத்தாம் நாள்……………..
அந்த கல்லறைமேல் …….
ஒரு ரோசா செடி thane அங்கு முளைத்த செடி
தாங்கிவந்தது இரு ' கருப்பு ரோசா' பூவை
அந்த ' பிறர்' இந்த ரோசா மலரையும் பிய்த்து
அழித்தனர் வெறி கொண்டு………
அழிக்க, அழிக்க அழிக்கமுடியா செடியை
கிள்ள கிள்ள தினமும் இரண்டே 'கருப்பு ரோசா;
மலர்ந்தது……..
துச்சாதனன்போல் ஓய்ந்துபோனார்
அந்த 'பிறர்' இப்போது
கல்லறைமேல் 'பூத்த ஆபூர்வ ரோசா' மலரை
மக்கள் ஓர் அறிய பொருளாய்க் காண
அங்கு வருகைத தருகிறார்கள் ………..
பூத்திருக்கும் கருப்பு ரோசா
அந்த ஆசை நிறைவேறா காதலர்களின்
ஆவியோ என்று அவ்வூரார் நம்புகின்றனர்.