இதயம் எழுதிய கவிதை

இதயம் எழுதிய கவிதை💔💔💔💔💔💔💔💔

என் உயிரில்
கலந்த விட்ட உறவே
என் இதயதுடிப்பின் ஆதாரமே
என் நெஞ்சில் ஆனந்தத்தை அள்ளி வழங்கிய அற்புதமே
என் உள்ளம் என்ற கோயிலில் தினம் ஆராதனை செய்யும் தெய்வமே
என் மனம் என்னும் மேடையில் அழகிய நடனம் புரியும் வண்ண மயிலே
என் கற்பனை என்னும் உலகில்
என் அரண்மனையை ஆலங்கரிக்கும்
என் இதய ராணியே
என் காதல் உன் அழகு பார்த்து வந்த வழக்கமான காதல் அல்ல.
என் காதல் உன் மனம் பார்த்து வந்த காதல்.
என் காதல் என் ஆன்மா எழுப்பிய ஆத்ம ராகம்.
என் காதல் நிச்சயம் காமத்தால் விளைந்த உணர்வு அல்ல.
என் காதல் என் இதயத்தில் நீ எழுதிய கவிதை.
என் காதல் உண்மை என்று நான் நிரூபிக்க என் ரத்தத்தால் எழுதினேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று.

எழுதியவர் : பாலு (25-Aug-19, 12:20 pm)
சேர்த்தது : balu
பார்வை : 370

மேலே