பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்கு பிடிக்குமா

மழையை வருவிக்க மந்திரம் கூறுவதும்
மழலையை மகிழ்விக்க தாலாட்டு பாடுவதும்
களைப்பை நீக்கிவிட கானா இசைப்பதும்
கடுமை மனநிலையில் இனிய இசை கேட்பதுஉம்
அரண்மனை வேந்தனை பாட்டிசையால் தொழுவதும்
அரசியல் தலைவனை அன்பால் துதிப்பதும்
இனிய சூழ்நிலையால் இன்பத்தால் மகிழ்வதும்
இயல்பானதாய் உள்ளதைப் போலே
அடர்வான அழகதனை அணிகலனாய் பெற்ற பெண்டீர்
ஆராதிப்பதையுமே அதிசியப்பதையுமே ஆமோதிப்பர்
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ததனால்
மனங்குளிரும் பாராட்டை மாண்புடனே எதிர்பார்ப்பர்
சின்ன கண்களையும் சிவந்த உதட்டினையும்
மின்னும் கன்னத்தையும் மிளிரும் பேரறிவையும்
தன்னகத்தில் கொண்ட அன்பு பெண்களின்
தனித்துவத்தை சொல்லிபுகழின் தன்னிலை குளிர்வரே
பூவில் பிறந்த புகழ்மிக்கத் தேனைப் போல்
பூவையர்களுக்கு புகழ்தல் என்பது புது அணிகலனே
அகலிகையும் ஆண்டாளும் ஆளுமை மிக்க அரசிகளும்
அழகான வர்ணனைக்கு ஆட்பட்டே வாழ்ந்திருப்பர்.
---- நன்னாடன்.