நிலவில் ஒருநாள்

நிலவைப் பார்த்து
நிதம் சோறு
தின்றதன்று!

நிலவுக்கே சென்று
நில ஆய்வு
செய்வதின்று!

கொடியில் மதிசுமக்கும்
நாட்டுக் கிடையில்
மதியில் கொடிபறக்க
புகழ்பறக்கும் நாடு இது!

சந்திரமண்டலம் தாவி
குதித்து ஓடும் காலம்
காணும் தூரம்!

தமிழகத்தின் அறிவகத்தால்
இனி சாத்தியம்!
நிலவில் தேனிலவு!

அரசுப்பள்ளி படிப்பு
அரசாளச் செல்கிறது
அம்புலிக்கு!

மயில்சாமி இட்ட பொறி
சிவனாகி எரியாகி
விண்வெளி பாய்கிறது!
மதி மகளின்
மறுமுகம் காண...

நிலவுக்குக் கடவுச்சீட்டு
வாங்கும் காலம்
தூரம் இல்லை!

நிலவில் இனி
ஏர்பூட்டி நீர்பாய்ச்சி
விவசாயம் செய்வோம்!
சந்திர மண்டலம்
சுற்றித் திரியும்
சந்திராயன் சக்தியால்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:34 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : nilavil orunaal
பார்வை : 2477

மேலே