காஷ்மீர் ஆப்பிள்

பாரத நாட்டின்
தலையங்கத் தோட்ட
காஷ்மீரி மக்கள்
நாங்கள்! விலைபோன
காஷ்மீர் ஆப்பிளும்
நாங்கள்!

தோட்டம் நாங்கள்
போட்டோம்! அதன்
பட்டா திருடிச்
செல்வது யார்?

நிலத்தில் விளைந்ததை
விற்றோம்! எங்கள்
நிலத்தையும் சேர்த்து
விற்றது யார்?

பழத்தை நாங்கள்
விற்றோம்! எங்கள்
உரிமை பழத்தை
விற்றது யார்?

சந்தையில் விலைபோகும்
காஷ்மீர் தோட்டத்து
ஆப்பிள் தான்!
இந்தக் காஷ்மீர் மக்களும்!
கார்ப்பரேட் சந்தையில்
விலைபோன காரணத்தால்!

மேலே மினுக்கும் துளி
மேவும் அழகு தான்!
அந்த அழகுக்குப் பின்னும்
மறைந்து இருக்கிறது!
உரிமை இழந்த ஆப்பிள்கள்
அழுத கண்ணீர்! இந்த
காஷ்மீரி ஆப்பிள்கள்
அழுத கண்ணீர்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:30 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 1605

மேலே