தங்கமும் தஙகையும்
நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கரூர் வருவதற்க்காக குடும்பத்துடன் பேருந்தில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தோம் ...
நல்லிரவு 2.30 சேலம் வருவதற்க்கு முன்பாக,
என் துணைவியாரின் காலில் ஏதோ உறுத்துவதாக தோன்ற,
அரைகுறை தூக்க கலக்கத்துடன்
அதை குனிந்து கையில் எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தவாராக என்னிடம் ரகசியமாக தெரிவித்தார் ...
பெண்ணின் ஒரு பக்க காது தோடு தான் அது ...
முதலில் கவரிங் நகையாக தான்
அது இருக்கும் என நினைத்தேன் ..
ஆனால் ..
அது தங்க நகை ...
எனக்கு முன்புறம் இருக்கை நோட்டமிட்டேன் ...
ஒரு இளம் வயது கொண்ட பெண்ணும்,
நடுத்தர வயது பெண்ணும் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார்கள் ...
நகை அவர்களுடையதாக தான் இருக்கும் என யூகித்தேன் ...
அதை எப்படி எழுப்பி கேட்பது என்ற சிந்தனையில் இருக்கும் போது,
சேலமும் வந்து விட்டது ...
பேருந்து நின்றதும்,
உடமைகளை எடுத்துக்கொண்டு கிழே இறங்கி முன் இருக்கையில் இருந்த பெண்கள் இறங்குவதற்க்காக காத்திருந்தேன் ...
நான் நினைத்தது சரி தான் ...
இளம் வயது பெண்ணின் ஒரு பக்க காதில் இருந்து தான் இந்த தோடு விழுந்து இருக்கிறது ...
தோட்டை காண்பித்து,
இது உங்களுடையதா என்று கேட்டவுடன் அவச அவசரமாக காதை தொட்டு பார்த்து, ஆமா சார் எனது தான் என்று தெரிவித்தார் ...
உடன் பயணம் செய்தது தாய் போல ...
கூலி வேலை செய்ய பெங்களூர் செல்வதாக தெரிவித்தார்கள் ...
இரண்டு சகோதரிகளின் கழுத்திலும் நகை எதுவும் இல்லை ...
நடுத்தர வயது கொண்ட சகோதரியின் கழுத்தில் மஞ்ச கயிறு மட்டுமே மிச்சம் இருந்தது ...
இரண்டு பேரும் பலமுறை எங்களுக்கு நன்றியை தெரிவித்தார்கள் ...
இந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நாங்க நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.