மனம்
லட்சக்கணக்கான லட்சியங்களை
தரும் அட்சய பத்திரமா
லட்சிய எல்லை தொடும்வரை
கோவம் சிரிப்பை கட்டுப்படுத்தும்
ராணுவ வீரனா
ஜெய்த்துவிடுவேன் என்று ஹீரோ போலவும்
ஒருவேளை தோற்றுவிட்டால் என்று வில்லன் போலவும்
என்னும் சினிமா கதைய
குழம்பிய மனம் தெளிந்த குட்டை போன்றது
கோவத்தால் அதை கலங்க வைக்க
கல் வேண்டாம் சிறு மழை துளி போதும் .