சாலை ஓர ஓவியன்
சாலையோர ஓவியன்
அழகிய விழி ஓரம்
மை இட்டு !
செவ்விதழ் வாயினுள்
சாயம் இட்டு
இடை மேல நழுவி
விழும் கச்சையினை
இழுத்து சுருக்கிட்டு !
உருண்டு திரண்டு
கீழிறங்கும் காலுக்கு
கொலுசு இட்டு
அழகு மயிலொன்றை அருகில்
வைத்து, கற்பனை செய்தவைகளை
வரைந்து முடித்து களைத்துப்போய்
எப்பொழுது
இப்படத்தின் மீது காசு விழும்
காத்திருந்தான் சாலையோர ஓவியன்.!

