கலிகாதல்

கரம்பற்றி உயிர் வளர்த்து
அறம்பூண்டிருந்த காதல்
உடற்தீனிக்கு சிரவிழிதேடும்
இச்சை உணவு கலிகாதல்

சில மனம்கொண்டு உயிர் வளர்கிறது
பல கரம்கொண்டு உயிர்அறுக்கிறது

சாதிமத பேதங்களையெல்லாம் அறுத்தெறிந்தது இக்கலியுககாதல்
சபாஷ்
சபாஷ் சொல்லிமுடிவதற்குள் சில
சாயங்களை வெளுத்தும்போய்விடுகிறது

சதைதேடும் மிருகத்தின் உடற்போதை கலிகாதல்
புரிதல்கள் நிறைந்த உறவுகளை
சிற்பங்களாக்கியிருக்கிறது

காமத்தை காதலென்கும்
காமமில்லாதது காதலேயில்லை என்கும்- தேகத்தின்சூடு நீங்கிடவே
பொய்ப்புன்னகை செய்துவருகிறதையா கலிகாதல்
கவனம்

உணர்வுகள் பகிரும் வாய்ப்பு தந்த
கலியுக காதல்
சில உறவுமுறை அர்த்தங்களை கெடுத்த்துக்கொண்டிருக்கிறது கலிகாதல்

யுகம் ஏதாகினும் காதல் காதலே
காதலுக்கும்
காலாவதிகாலம் கொடுத்துவிட்டது இந்த கலியுககாதல்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (29-Aug-19, 8:08 pm)
பார்வை : 144

மேலே