அன்னையே உன்றனின் அன்பைச் சொல்வேன்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் விளம் மா தேமா அரையடிக்கு)
அன்னையே உன்றனின் அன்பைச் சொல்வேன்
..அகிலமும் நீயெனக்(கு) என்றே சொல்வேன்;
அன்புடைத் தந்தையின் அறிவைச் சொல்வேன்;
..அறிவினை அளித்தவர் அவரே என்பேன்;
கன்னலாய்த் தமிழினைக் கருத்தாய்ப் பேச
..கல்வியைத் தந்தவர் ஆசான் என்பேன்;
இன்னலை நீக்கியே இனிமை என்றும்
..ஈந்தவள் என்றனின் இல்லாள் என்பேன்.
- வ.க.கன்னியப்பன்