வாடி நெஞ்சுக்குள்ள
வாடி நெஞ்சுக்குள்ள உறவா
காப்பேன் உன்ன என் உயிரா,
வாடி நெஞ்சுக்குள்ள உறவா
கண்ணில் வைத்து பாப்பேன் உன்ன அழகா !
அந்த அழகு முடிசுருல
நெஞ்சுக்குழி சுத்தும் வறுட
நீ சிந்தும் வார்த்தைக்கு வரிசையாகும்
மொழி கூட, அதைத்தேடி என் மொழி
குழைந்தாடும் கூத்தாடும்
உன் பார்வை பட்டாலே
உயிரோட கலந்தாடும் --- வாடி நெஞ்சுக்குள்ள
சாமரம் வீசிடும் கூந்தலும் வருடும்
வாடிடும் என்மனமோ ஏங்கும்
கூதலும் நடமாடும் கூடிட
குடைவிரிக்கும் கண்ணாடி
குழலாடும் உன் முன்னாடி
வந்திடனும் நீயே வாழ்ந்திடலாம் நாமே ! -- வாடி நெஞ்சுக்குள்ள