விபத்தின் வேதனை

நான்கு வழி நெடுஞ்சாலையின் மேல்
இரண்டு சக்கர வாகனத்திலே
இயல்பாக பயணித்தனர் இருவர்
சாலையை குறுக்கிட்டுச் சென்றனரோ
சாதாரணமாய் பயணம் செய்தனரோ

வேகமாய் வந்த அசுர வாகனம்
விர்ரென்று அவர்களை மோதிவிட
வீரென்று அலறியப்படி விரைந்து சாய்ந்தனரே
வீழ்ந்து கிடந்தவர்களை மீட்க யாருமில்லை
விரைவாய் பயணிப்பதையே விரும்பினர் யாவருமே

அரசுப் பேருந்தும் அசரவில்லை அதைப்பார்த்து
அதில் பயணித்தோர் அய்யோ என அலறினர் மட்டுமே
ஈரமானோர் பேசியால் அழைத்தனர் மீட்பு வாகனத்தை
காயம்பட்டோர் காப்பாற்றப்பட்டோரோ காலாமானாரோ
கனக்குது நம் நெஞ்சம் கவலைக் குடிக்கொண்டு

படிப்பும் பெருகலாச்சு பகுத்தறிவும் வளரலாச்சு
பஞ்சமாபாதகத்தின் வீரியமும் பன்மடங்கு கூடலாச்சு
இயலாதோருக்கு உதவுவது இடிகண்ட நாகமாச்சு
வலி பட்டோர் வேதனையோ எளிய வியாபாரமாச்சு
கருத்துச் சொல்லி மாற்றுவது கானல் நீர் போன்றதே
சொரணை நமக்கு வந்துவிட்டால் சூழ்நிலை மாறாதோ
- - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Sep-19, 9:40 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1079

மேலே