பதில் சொல்
பூக்கும் ரோஜாக்கள்
புண்ணியம் செய்வதில்லை
உதிர்ந்துவிடாதிருக்க;
மானுடப் பிறவியில்
மரணம் வரையும் தொடர்கிறது
தானமும் தர்மமும்- இருந்தும்
தோள் கொடுத்து தூக்கியவனை
தூசிபோல் தட்டிவிட்டு
தூண்டிலிட எப்படி முடிகிறது;
மானுடா... பதில் சொல்!