ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்

மழலைக்கு
உயிர்தந்து!
மனதுக்குள்
இடம் புகுந்து !
தவறுகளுக்கு
தண்டனை தந்து!
அணைத்துக் கொண்ட
அன்பின் மறுபிறப்பு!
சிறகுக்கு வண்ணம் தீட்டி!
தவறுக்கு எல்லை காட்டி!
கனவுக்கும் கைகள் நீட்டி!
சித்திரம்
உயிர் பெற செய்தார்கள்
வானில் பறக்க!
உடைந்த சிலைக்கும்
புது உருவம் தந்து!
மகிழ்ந்த சிற்பி!
கரும்பலகையும்
காத்திருக்கும்
தொட்டத்திருத்த அழகாய்
கைகள் பூத்திருக்கும்!
மொழி தெரியா
உலகிற்கும் வழிகாட்டிய
என் தெய்வங்கள்!
தங்களை வருத்தி
எங்களை உலகில் உயர்த்தி
வெற்றி பெற செய்தார்கள்
எங்களை எல்லாம் வாழ்வில்
வெற்றி
பெற செய்தார்கள்!
இங்கு
கெஞ்சலும் உண்டு!
கொஞ்சலும் உண்டு!
மிஞ்சினால் பிரம்பும் உண்டு!
எல்லாம் எங்கள்
நன்மைக்கே என்று!
மனதுக்குள் எங்களை
உண்மையாக நேசிக்கும்
மற்றுமொரு தாய் தந்தையாக என் ஆசிரியர்கள்!
சந்திரனாக, சூரியனாக!
எங்கள்
இருளுக்கு ஒளி தந்து
வழிநடத்திய
எங்கள் ஆசானுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (5-Sep-19, 6:02 am)
பார்வை : 122

மேலே