விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

அன்னையின் ஆணையை ஏற்று
ஆங்கமர்த்து காவல் புரிய
அய்யன் வந்து வழி கேட்க
அவருக்கும் தடைகூறி மறுக்க
சினத்தால் அவர் சிரசை கொய்ய

அன்னையும் நடந்ததை அறிந்து
அய்யனை உயிர் கொணர வேண்டிட
ஆங்கு வந்த கரியின் தலையைக் கொண்டு
ஆனைமுகத்தனைப் படைத்து உயிர் கொடுத்து
அவனியில் யாவருக்கும் இடர் தீர்ப்பாய்
எனமொழிந்து அம்மையப்பர் அருளிட

வினை தீர்க்கும் விநாயகராய்
கஷ்டங்களை நீக்கும் கணபதியாய்
துன்பம் போக்கும் தும்பிக்கையோனாய்
கவலைகளை தீர்க்கும் கற்பகவிநாயகராய்
காரியம் சித்திக்க வைக்கும் ஐயிங்கரனாய்
குவலயம் கொண்டாடி மகிழும் சதுர்த்தி நாளிதுவே!

எழுதியவர் : கே என் ராம் (10-Sep-19, 12:49 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 41

மேலே