பஜ கோவிந்தம் பக்தி வெண்பா 2 பா 2 3 4

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா !
2 .
விடுவா யடாமூடா செல்வத்தின் தாகம்
தொடுவாய் மனதினை தூய அறிவால்
அடைவாய் திருத்தி வினைப்பயன் தன்னால்
கிடைத்த தெதுவோ அதால் !
3 .
பெண்ணின் முலையும்அத் தொப்புள் சுழலிடமும்
கண்டுகண் டேநீயும் மோகம் அடைவதேனோ
தொங்கு தசைகளின் தோற்றப் பிழையாடா
தங்குபுத்தி யால்தேர்தேர் நீ !
4 .
தாமரைப்பூ நீர்த்துளி அற்புதம் இவ்வாழ்வு
ஆமதை நோயும்தே காபிமானம் பீடிக்க
சோகம் அனைத்தும் அறி !