நான் சொல்ல

என்னவென்று நான் சொல்ல
உன்னை பற்றி
என் எண்ணம் எல்லாம்
நீயே
திங்கள் குளிர் தந்தாய்
செவ்வாய் செழுமை தந்தாய்
புதன் புனிதம் கற்பித்தாய்
வியாழன் விடியல் அளித்தாய்
வெள்ளி வெற்றி தந்தாய்
சனி சகலமும் தந்தாய்
ஞாயிரு ஞாபகம் ஆனாய்...
கிழமைகள் உன்னை தேட
கிடைத்த பொக்கிஷமே...

- முத்துச்செல்வி துரை

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Sep-19, 7:29 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : naan solla
பார்வை : 191

மேலே