பிதற்றுகிறாய்

அன்பை யாசித்தலிலிருந்து
அன்பை புரியச்சொல்லி முறையிடுதலிலிருந்து
அன்பின் அவமானங்களிலிருந்து
பொறுத்துக்கொள்வதிலிருந்து
அடக்குவதிலிருந்து
அடங்கிப்போவதிலிருந்து
நிரூபித்தலிலிருந்து
மாபெரும் நடிப்பிலிருந்து
விட்டுவிடுதலை ஆவதைத்தானே
நீ பிரிவென்று பிதற்றுகிறாய்

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:31 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 34

மேலே