தராத முத்தம்
அன்றொருநாள்
அந்த மழைக்கால மாலையில்
நாம் தனித்திருந்த பொழுது
என் காதருகே நீ சொன்னாய்
இந்த குளிர்
நமக்கானது என்று
உன் உதடுவழி பயணித்த
சொற்கள் சுமந்த காற்று
சூடானது..
மௌனமாய் புன்னகைத்து
உன்னை ரசித்தேன்
எதற்காகவோ நீ வெட்கப்பட்டாய்
சூழல் நமக்குள் ரசாயனம் சுரந்துகொண்டிருந்தது
அதுவரை தந்திடாத
அதுவரை பெற்றிடாத
ஒரு ரகசிய முத்தம் ..
மனதிற்குள் வெகு ஆழத்தலிருந்து
வெடித்துக்கொண்டிருந்தது
விழிபார்க்காமல் தலைகவிழ்ந்து நீ
இனம்புரியா ஒரு நிலையில் நான்
நீ அறியாமல் உன் இதழ் ரசித்தேன்
ரேகைகளுடன் இரு மலரிதழ்கள் ..
ஒரு நொடி மனதிற்குள்
என் காதல் சொன்னது
'உன் தேவதை களங்கமில்லாதவள்'
தராத முத்தத்துடன் வெளியேறினேன்
என் தேவதைக்காக .