நம்நட்பு

அறிமுக நாளில் ஏனோ
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய் !!!

இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய் !!!

சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய !

சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில் !!!

உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே !

பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு !!!

எழுதியவர் : jairam (16-Sep-19, 7:21 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 695

மேலே