ஆனந்த காலை வணக்கம்

ஆனந்த காலை வணக்கம்.

அதிகாலை ஆதவனே
வணக்கம்
வரிசையாக இறக்கைகட்டி வானில் பறக்கும் பறவைகளே வணக்கம்
கலைந்து போகுமா மேகங்களே வணக்கம்
ஓயாமல் கரைதேடும் அலைகளே வணக்கம்
பூத்து குலுங்கும் வண்ண பூக்களே வணக்கம்
இன்னும் சற்று நேரத்தில் விடை பெற போகும் இலையில் தூங்கும் பணி துளிகளே வணக்கம்
காலை நடை உடற்யிற்சி செய்யும் அனைவருக்கும் வணக்கம்
காலையிலேயே காதலியை நினைத்து கவிதை எழுதும் காதலருக்கு வணக்கம்
கிழ்வானம் வானம் சிவந்த வண்ண கோலம் இட்ட இயற்கை அன்னைக்கு வணக்கம்
ஜில்லென்று வீசும் மிதமான குளிர் காற்றே வணக்கம்
கட்டுமரத்தை கடலுக்குள் எடுத்து செல்லும் மீணவருக்கு வணக்கம்
யாரோ படித்து விடுவார்கள் என அவசர அவசரமாக கடல் கரையோரம் வலைக்குள் புகுந்து கொள்ளும் நண்டுகளுக்கு வணக்கம்
ஓசியில் வளம்பரதிற்க்காக செய்திதாள் கையில் தினித்து செல்லும் அந்த பையனுக்கு வணக்கம்
கடலோரம் கம்பீரமாக ஊன்று கோலுடன் சிலையாக நிற்கும் காந்தியாருக்கு வணக்கம்
இவையாவும் நான் காண செய்யும் அந்த ஆண்டவனுக்கு என் வணக்கம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (17-Sep-19, 7:07 am)
சேர்த்தது : balu
பார்வை : 166

மேலே