மழை வருமோ
மழை வருமோ?
சூரியனை அணைத்து
புதைத்து விட்ட
கரும் மேகங்கள்
அதன் இருளையும்
மீறி திமிறி திமிறி
கசியும் செங்கதிர்கள் !
வளைந்து நின்று
வண்ணங்களை காட்டி
வானவில் !
துளி துளியாய்
நீர் திவலைகள்
முகத்தை தடவி
வருடி செல்லும்
வாடை காற்று
மரம் செடிகளின்
தலை ஆட்டம்
மழை வருமுன்
மனதுக்குள் வரும்
கிளு கிளுப்பு
அவசரமாய் கூடு தேடி
பறவை கூட்டம்
அழகை படைத்து
இயற்கை பெயரிட்டு
கண்களில்
விருந்தை படைத்தான்

