வாழையடி வாழையாக வாழ வேண்டும் 555

வாழை...


சுபகாரியமோ

துக்க காரியமா...


உன்னை முதன்முதலில் வாசலில்

நின்று வரவேற்பது வாழைமரம்தான்...


நாம் உண்ணும் உணவு

மண்ணில் படாமலிருக்க...


தன்னையே மண்ணில்

அர்பணிக்கிறது வாழை இலை...


உப்புநீர் பருகிவிட்டால் சிறுநீர்

கல்லாகுமாம் அடிவயிற்றில்...


தன் உமிழ்நீரை

கொடுக்கிறது வாழை...


எத்தனைமுறை வெட்டினாலும் மீண்டும்

மீண்டும் துளிர்விடுமாம் வாழை...


வாழ்வில் எத்தனை

முறை விழுந்தாலும்...


மீண்டும்

எழுஎன்கிறது வாழை...


காளையும் பாவையும் நேசிக்க

வீட்டினிலே மறுத்துச்சொல்ல...


சூடிக்கொண்டது
மரணத்தை
காதல்பூக்கள்...


கன்னிகழியாதவர்களாம் வாழைக்கு

தாலிகட்டி வெட்டுப்படுகிறது...


நாம் வாழும்போது நமக்காக

தன்னையே அர்பணிக்கிறது...


நாம் இறந்தாலும் கூடவே

இறக்கிறது தாலியுடன் வாழை...


வாழவேண்டும் நாமும்

வாழையடி வாழையாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Sep-19, 4:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 172

மேலே