ஒரு தேவதை

இந்த ரயில் பயணத்தில்
ஜன்னலோரம்
நெற்றி விழும் ஒற்றைமுடி ஒதுக்கியபடி
கொஞ்சமாய் பார்த்தாய்
சந்தனமும் மஞ்சளும்
கலந்தெடுத்து குழைத்துவந்த
பெயரில்லா நிறமடி நீ..
ஒற்றைப்பார்வைதான் உனது...
அதன்பின்
சுற்றம் மறந்ததடி என் பார்வை..
ஒப்பிட முடியாமல் திணறுகிறேன்..
உன்னிதழை..
அதுதான்
இதழ்.
அவ்வளவே..
காவிய பாடல்கள் பலவற்றில்
கற்பனை செய்தேன் அழகிகளை
கம்பனின் சீதையும்
கல்கியின் நந்தினியும்
ஒருவேளை உனைப்போல் இருந்தனரோ??
அழகியல்கள் வெளிப்படுத்தா
உடைகளுக்குள்
அற்புதம் ஒன்று ஒளிந்துள்ளதை
கண்முன் கண்டேன்..
நீ என்முன்
சிறிதுநேரப்பயணம்தானடி..
காலத்தை இழுத்து நிறுத்திவிட
ஏதும் கடிவாளம் கிடைக்காதா???
கண்களுக்குள் விழுந்து
உயிர்குடித்துப்போகிறாய்..
விட்டுப்போனபின் நெஞ்சம்
கத்திக்கதறுதே..
நிச்சயமாய் கூறுவேன் பெண்ணே
வானிறங்கி வந்த
தேவதை தான் நீ..

எழுதியவர் : M.Rafiq (19-Sep-19, 5:46 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : oru thevathai
பார்வை : 690

மேலே