காகிதக் கப்பலாய்

நீ கொடுத்த பிரியத்தை
நீயே பிரித்தெடுத்து விட்டாய்./
நீ காட்டிய அன்பை
நீயே ஈட்டியாக்கி விட்டாய்./
நீ அளித்த மகிழ்ச்சியை
நீயே சிதைத்து விட்டாய்./
நீ காட்டிய பாசத்தை
நீயே பாதியில் கொன்று விட்டாய்./
நீ நிழல் இல்லை
தீ என்று சூடு வைத்துக் காட்டி விட்டாய்./
நீ கொடுத்த அத்தனையும்
நீயே அழித்து விட்டாய்./
நீ இன்றி என் நெஞ்சம் இன்று
நீரில் மூழ்கிய காகிதக் கப்பலாய் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Sep-19, 4:04 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே