திரை நீக்கினாள் தேவதை

வெண் திரை நீக்கி
மெல்ல நோக்கிய பெண்ணே/
உன் கண்கள் ஊர்ந்தது என் மேலே /
கள்ள விழி கண்டு மயங்கினேன் /
நான் மது சுவைக்காமலே /
மது உண்ட வாண்டாக பெண்ணே./

உன் நாணம் அதை நானும் அறிந்தேன் /
உன் விழி பேசிய மொழி என்ன மொழி /
என்று அறிய முடியாதவனாய் /
வந்து அமர்ந்தேனடி பெண்ணே /

இதமான நறுமணம் காற்ரோடு கலக்க/
அலங்காரம் பண்ணியே நீ சிங்காரி / போல்
சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்க. /(உன்
அழகை மெல்லிய திரைச்சீலை /
காட்டிக் கொடுத்ததடி பெண்ணே/

உன் சுண்டு விரல் கொண்டு /
திரை கிழித்துப் பார்த்தாயே /
என் காந்தப் பார்வை கவர்ந்து
விட்டதோடி உன்னை /
செந்தமிழ் கொண்டு செவ்விதழ் திறந்து /
தூது சொல்லடி பெண்ணே./

சேலை கட்டி பொன் நகையும்
புன்னகையும் சுமந்து /
வெட்கத்தில் புதையுண்டு பாதி
விழி காட்டி /
என்னை வீழ்த்திய பெண் நிலவே /
உன் பக்கம் அமர்ந்து உன் வதனம்
நோக்கும்/
நாள் விரைவில் உண்டடி
கண்ணே அடி பெண்ணே ./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Sep-19, 3:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 3360

மேலே