அவள் மனம் அழகு
அழகான மனசு அவள் மனசென்றாய்
அவள் அழகு பார்க்கமுடிகிறது ஆனால்
அந்த மனதின் அழகு...… ஓ, ஓ, அதுவா
அவள் பாதி திறந்த செவ்வாயிலிருந்து
காதில் சேர்க்கும் பண்பான மொழியிலிருந்து
அதன் மலரொப்ப மென்மையில் , பவ்வியத்தில்
கலப்பேதுமிலா அதன் தூய்மையில்
அன்பு மணக்கும் அவ்வார்த்தைகளில் .
கண்களை மூடி கேட்டாலே கற்பனை
அந்த மொழிக்கு சித்திரம் வரையும்
ஆம் அவள் மனதின் அழகு அதுவே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
