இன்னும் ஏன் தேடுகிறாய்

இன்னும் ஏன் தேடுகிறாய்?
================================================ருத்ரா

காதலே!
உன்னை ஒவியம் தீட்டி
ரவிவர்மாக்களும்
பிக்காஸோக்களும்
தோற்றுத்தான் போனார்கள்.
பெண்ணை
அங்குலம் அங்குலமாக‌
கூர்மையாய் தீட்டினார்கள்.
அந்த வெற்றிடத்தை இன்னும்
வரையமுடியவில்லை.
ஆம்.
அங்கே அந்த இதயம்
வெற்றிடமாகத்தான் இருந்தது.
சற்றுப்பொறு.
அவசரப்படாதே.
இதையும் அவளுக்கு பொருத்திவிடுகிறேன்.
அப்புறம் உல்லாசமாய் செல்லுங்கள்
என்று
அந்த இறைவன்
சொல்லிமுடிப்பதற்குள்
இவர்கள் வந்து விட்டார்கள்.
பெண்ணுக்கும் இன்னும்
அந்த இடம் வெற்றிடமாகத்தான்
இருக்கிறது.
இன்னும் ஏன்
அவளிடம்
இதயம் தேடுகிறாய்?

==========================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (24-Sep-19, 2:51 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 121

மேலே