ஏங்கும் செல்லமது
பார்த்து பார்த்து
நெஞ்சில் பதிந்த முகம் அது..
என்னை கவலைகள்
மென்று தின்னாதவாறு
பார்த்துக் கொண்ட மனமது..
என் கரங்களுக்குள்
நிறைந்து கொண்டு
என் பிடித்தங்களுக்குள்
அடங்கிய நெஞ்சமது..
எனக்கே எனக்காய்
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உருவமது..
மனத்துயரத்தின்
பேரிரைச்சலின் போது
அமைதியாய் வரும் தீர்வு அது..
எப்போதும்
என் கண்ணிலியே இருந்துவிடேன்
என்று ஏங்கும் செல்லமது..
அது
முழுக்க முழுக்க
என்னுடையது..
என்னுடையது..
எனக்கு மட்டுமே
சொந்தமானது.. ❤❤❤
Insta Id - @tashantatanisha