கன்னியின் காதல்

என்னை அவனுக்கு
முன்னாலே தெரிந்திருக்கிறது
பின் ஒருநாள் பேச்சின்
இடையே சொன்னான்
முதன்முதலாய் அவன்
நெஞ்சில் இடித்து
காயப்படுத்தியவள்
நான்தானென்று
அப்போது வெட்கப்பட்டு
நான் உதிர்த்த புன்னகை
பூக்களை நிச்சயமாய்
ஒருநாள் திருப்பித்தருவதாக
உறுதியும் அளித்திருக்கிறான்
அடக்கமே உருவான பெண்
என்ற இலக்கணத்தை
மீறிய என்நெஞ்சின் திமிரை
அவன் ரசிப்பதை நானும்
ரசித்துக்கொண்டுதானிருக்கிறேன்
விலகியிருந்தாலும்
அவன் கண்கள்
அள்ளியும் கிள்ளியும்
விளையாடிய என் அழகை
அவன் இன்னும்
விட்டுவைத்திருப்பதனால்
என் கர்வம் இன்னும்
கூடிதான்போயிருக்கு
இந்த இரவில் இருநிலவுகளை
பற்றிக்கொண்டிருக்கின்றன
என் விரல்கள் -
தனியாக காதலை
விட்டுவிட மனமில்லாமல்
மலர்கள் தாங்கிடும் காம்புகள்
மழையையும்
தாங்கிக்கொள்வதுபோல்
கடலான நான் எப்போதும்
தயாராகவே இருக்கிறேன்
நதியான அவனை எதிர்கொள்ள......!!!