புன்னகை இதழாள் வழங்கினாள் சான்றிதழ்

புன்னகையில் கவிதை எழுதுபவள்
பூப்பறிக்க வந்தாள்
அவள் பூப்பறித்து சென்றாள்
அவள் புன்னகையை நான் பறித்து வந்தேன்
கவிதைகள் நூறு பூக்களாய் மலர்ந்தன
தொகுத்து தர புத்தகத்தை
அவளிடமே எடுத்துச் சென்றேன்
பக்கங்களை சில நிமிடங்கள் புரட்டினாள்
உதட்டைப் பிதுக்கினாள் ; தமிழ் பேசத் தெரியும்
எழுதப் படிக்கத் தெரியாது என்றாள்
விடவில்லை நான் வாசிக்கிறேன் கேட்டு சொல் என்றேன்
சிரித்தாள் ....ம் என்று அனுமதி தந்தாள்
வாசித்தேன் முதல் பக்கத்தில் 1 2 3 என்று ...
கையசைத்து நிறுத்தினாள்
முதல் பக்கத்தில் 5 வந்து 2 வதில் 6 ...என்று சொல்லிச் சென்று
9 தாவதில் 10 10 தாவதில் பத்தும் ....
மொத்தத்தில் புத்தகம் ஒரு கவிதைச் சித்திரம் என்று
சான்றிதழ் வழங்கினாள் !
கவிதையின் மூலக் கவிஞை அவள் தானே !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-19, 10:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 779

மேலே