முன்னாள் காதலி
உன்பெயர் சொல்லிமுடிக்கும் முன்பே
உள்ளுக்குள் உண்டாகும் சிலிர்ப்பினை
கண்மூடி ரசிக்கிறேன்..
உன் புன்னகையும் பார்வையும்
என்னுள் வேர்களைபரப்பி
ஆழப்புதைத்து வைத்துள்ளன
என் காதலை
பேசிவிடாமல் கடத்திய நிமிடங்களில்
ஆயிரமாயிரம் கவிதைகள்
கொட்டிக்கிடக்கின்றன
அன்றுபோல் இன்றும்நீ
அழகாய்தான் சிரிக்கிறாய்
புதைந்துபோன காதல்
துளிர்விடத்துவங்குகிறது