வராமலா போவாய்

வெங்கடேசன்... நாங்கள்
எதைச் சொன்னால்
குழுவில் இருப்பாய் நீ...
அதைச் சொல்லு
நாங்கள் சொல்கிறோம்...

எப்படிச் சொன்னால்
குழுவில் இருப்பாய் நீ..
அதைச் சொல்லு..
அப்படிச் சொல்கிறோம்...

எப்போது சொன்னால்
குழுவில் இருப்பாய் நீ..
அதைச் சொல்லு..
அப்போது சொல்கிறோம்...

எதையும் தாங்கும்
இதயம் பெற என்ன
செய்ய வேண்டும் என
பாடம் எடுப்பாய்...
குழுவிலிருந்து நீ பிரிவதைத்
தாங்க ஏது வெங்கடேசா
எமக்கு இதயம்...

பிரிந்து சென்றால்
நேரம் மிச்சம்... அது
ஒருவன் உனக்கு...
அதுவே நஷ்டம்
அறுபது பேர் எமக்கு...

கீதை தெரிந்த உன்னிடம்
எதைக் கொண்டு வந்தோம்
நாம் இழப்பதற்கு...
என்று கீதாச்சாரம்
சொல்ல விரும்பவில்லை...
குழுவின் கிருஷ்ணன்
அட்மின் சொன்னால்
அர்ச்சுனனாய்க் கேட்பாய்
திரும்பி நீ வருவாய்...

வாட்ஸ்அப் ஸ்மைலிகள்
வாடுகின்றன உன்
கண்களும் கைகளும்
படாததால்...

சமூக வலைத்தளங்கள்
வலை விரிப்பதற்கு முன்பு
தன்னோடு படித்து
நெருங்கிப் பழகிய நண்பனை
ஆண்டுகள் பல கழித்து
தற்செயலாய்க் காண்கையில்
உள்ளம் உவகை கொள்ளும்...

அந்தநாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே...
நண்பனே... நண்பனே.
என்று பாடத் தோன்றும்...
எந்த ஊரில் எந்த நாட்டில்
எங்கு காண்போமோ...
மனசு ஏக்கம் கொள்ளும்...
நினைவுகள் தூக்கம் கொல்லும்...

அட்சய பாத்திரமாய்
நினைவுகளை அள்ளித் தரும்
அரிய விஷயங்களைச்
சொல்லித் தரும்
வாட்ஸ்அப் செயலி
அதுவும் ஜிஸிஇ செயலி
விட்டுவிட வேண்டாம்
நண்பா... எம் மனதை
சுட்டுவிட வேண்டாம்...

ஆயிரம் ஆண்டுகள்
வாழ்க்கை இருந்தால்
ஒரு ஐம்பதை இழக்கலாம்...
ஐம்பதுக்குள் மட்டுமே வாழ்க்கை
மிச்சம் இருக்கையில்
கிடைத்ததை இழப்பதா...

கண் கெட்ட பின்னே
சூரிய உதயம் எந்தப் பக்கம்
ஆனால் எனக்கென்ன
என்று பெரிய பெரிய
வார்த்தைகள் உன்னிடம் சொல்ல
நாங்கள் விரும்பவில்லை
அன்பாய் வா... அழகாய் வா
திரும்பி வா... விரும்பி வா...
விரைந்து வா...
என எளிய வார்த்தைகள்
சொல்லி அழைக்கிறேன்...

நீ...
பேசினால்.. மலர்கள் மலரும்..
கைதட்டினால் இதயங்கள் மலரும்...
உன் ஸ்மைலிச் சிரிப்புகளில்
வானமும் வசப்படும்...

வெங்கடேசா...
இவ்வளவு சொல்லியும்
வராமலா போவாய்...
ஸ்மைலிகளை அள்ளித்
தராமலா போவாய்...
என்றும் எதிர்பார்ப்புடன் ...
அன்புடன் ஜிசிஇ நண்பர்கள்...
😃💐👍🙏🌹🤝❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Sep-19, 1:46 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 238

மேலே