போராடு என் தோழா

தொடும் தூரம்
இந்த வானம்
என மாறி
உனை சேரும்
ஒருபோதும்
தளராத
மனதாலே
யாவும் கூடும்
வெற்றி என்ன எட்டாக் கனியா ஏக்கத்தோடு பார்த்து நிற்க
வெற்றி என்ன சந்தை பொருளா
கூவி கூவி தெருவில் விற்க
முயன்று பார் யாவும் இங்கே
உன் கையில் சேர்ந்து உன் வசமாகும்
உழைத்துப் பார் என்றும் இங்கே
சொர்க்கம் உந்தன் வீடாகும்
சரித்திரப் பக்கம் மிச்சம் இருக்கு உந்தன் பெயரை நீயும் எழுத
போராடு போராடு
வெற்றி உந்தன் வாய்ப்பாடு

எழுதியவர் : ந.சத்யா (22-Sep-19, 9:04 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : poraadu en thozhaa
பார்வை : 187

மேலே