என் கன்னங்களில் ஓடும் உன் நினைவுகள் 555

உயிரானவளே...


சுதந்திரமாய் பறக்கும் பட்டாம்

பூச்சியை பார்க்கும்போதெல்லாம்...


என் கடந்த காலங்களே

நினைவுகளில்...


நீ இருந்தபோது வேகமாக

கடந்த சில நாட்கள்...


நான் மட்டும்

இருக்கும் நேரம்...


நகரவே முடியாமல்

கடிகார முட்கள்...


சில நினைவுகளை

நான் மறந்தாலும்...


சில வார்த்தைகள்

சில நேரங்களில்...


என் கன்னத்தை தொட்டுத்தான்

செல்கிறது உப்புநீராக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Sep-19, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 569

மேலே