எனது ஆசான்
அறிவும் ஆற்றலும் அளித்ததோ ஓர் சக்தி
அடிபணிந்து வணக்கம்,ஆசானே என் புத்தி
கல்வி அறைக்குள் நீ வரும் முன்-பயம்
உண்டாகும் மன அறைக்குள்
மௌனம் காக்கும் சுவர்களோடு- குனிந்த
தலைகொண்ட தங்களை தலைநிமிரச் செய்த தலைவனே
குயில் போல் பேசி சிரிப்பாய்யோ
கோபத்தில் புலியாயி முறைப்பாயோ
உலகை கற்றுத்தந்து, அதை உணரச் செய்து,
உள் மனதில் இடம் பிடித்தாயோ
நூல் வாசித்தால் போதும் வாழ்ந்துவிடலாம்-இவ்வுலகை
நீ பேசியதை யோசித்தால் போதும் ஆண்டு விடலாம்
கவியின் எதுகைக்கும் மோனைக்கும்
இடம் கொடுக்க மதியின்றி நீ என்றேன்
மனதால் ஒரு நாளும் மாறாது மரியாதை
மாறினால் தாங்கள் வருகையின் நேரம்
மூச்சுயற்ற உடலாய் உறங்கிகொண்டு இரு