தனிமை
நதியோரத்தில் நதிக்கரையில் நான்
என்னவளுக்காக காத்திருந்தேன்
அவள் வாராதுபோக தனிமையில் நான்
அழகாக அன்னம்போல் நடை யிட்டு
நதி அமைதியாய் ஓட, நான் கேட்டேன்
நதியை 'நதியே எங்கு போகின்றாயோ இன்று
இப்படி பதட்டம் ஏதுமில்லாது ஒய்யாரமாய்' என்று,
நதி அதற்கு சொன்னது 'எனக்காக காத்திருக்கும்
அக்கடலோடு சேர்ந்து உறவாட இன்றிரவு
பௌர்ணமி நிலவில் என்றது நதி '.......
இரவும் வந்தது, நிலவும் வந்தது
நதியோ கடலைக்காண சென்றது....
தனிமை என்னை வாட்ட கரையில் நான்