கோலம்

என்னைப் பார்த்த நீ
என்னை 'கண்டு கொண்டாயோ',
பார்த்த நீ பரவசம் அடைந்தாயோ ,
காதல் வயப்பட்டு... அப்படித்தான்
என்று என் நெஞ்சம் சொன்னது ;
நீ வெட்கத்தில் தலைகுனிந்து
மண்ணில் உன்னை அறியாமலே
ஏதோ ஒரு கோலம் கிறுக்க
அது ' உன் இதயம் அதில் நான்'
என்று 'அம்பு குறியும்' இட்டு வைத்தாயே
கோலத்தின் புள்ளியாய் அது
எனக்காக நீ வரைந்த 'காதல் கோலமா'
என் நெஞ்சு 'ஆம்' என்கிறதே
நீயோ இன்னும் மௌனத்தில் .....
ஓ, ஓ, அது வெட்கம் என்கிறது என் மனம்
எப்படியோ உன் காதல் என் மீது
திங்களின் தண்ணொளியைப் படர
நானும் குளிர்ந்தேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Oct-19, 4:44 pm)
Tanglish : kolam
பார்வை : 53

மேலே