கண்களே
வான வில்லின் வனப்பு வேறு
வண்ணம் பூசிக் குறைவ தில்லை,
கானக் குயிலின் கீதம் என்றும்
காக்கை கரைந்து மாறுவ தில்லை,
ஆன மட்டும் சாயம் பூசி
அழகினை மறைத்தும் அவளைக் காட்டிடும்
மோன விழிகளின் பார்வை தானே,
மோதும் விழிகளே மங்கைக் கழகே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
