மேக தத்தை - து கிருஷ்ணமூர்த்தி

மலை முக(ட்டை)த்தை குளிர் உதட்டால்
மெல்ல வருடும் கருமேக தத்தை
அலை அலையாய் தளிர் கரத்தால்
செல்ல தழுவும் வெறுந்தேக மதை.

நெடிதுயர்ந்த பெருமரங்களிடை ஊடாடி
ஏறி இறங்கும் சாலைமீது ஓடோடி
கொடிஇடை காதல்மங்கை மடிதேடி
வாரியணைக்கும் கார்முகில் அருந்தோழி.

பாறை மரம் குளிர்ந்தும் வியர்த்திடுமே
வெறும் தழுவலின் குளிர் பெரும்வெப்பமோ?
தாரை தாரை நீர் வழிந்து அருவியாகும்.
அருங்காதலின் சுகதகிப்பும் நெருப்பாறாம்

எழுதியவர் : D கிருஷ்ணமூர்த்தி (4-Oct-19, 1:04 pm)
பார்வை : 90

மேலே