வெட்க முலாம்
மொழிப் பரிவர்த்தனையின்றி
மொழிப் பெயர்க்கப்படும்
அவயம்தான் உன் வெட்கம்.
ரசக் கண்ணாடியில் தெரியும் உன் உருவம்
வெண் கண்ணாடியில் பிம்பமாக தோன்றும்
நீ வெட்கப்படும் வேளைகளில்
முதுகுக்குப் பின்னால் கடந்து சென்று
முகந்திருப்பாமல் நீ கொள்ளும் வெட்கம்தான்
அசல் வெட்கமெனில்
கால் கட்டை விரலால் நீ போடும் விட்ட கோலம்
ஒரு வெட்கப் பிறை.
உள்ளார்ந்த ஆரத்தியாய்
வெட்கம் உன்னுள் ஒளிந்துக் கொண்டுள்ளதால்தான்
ஒப்பற்றப் பிழம்பாய் நீ என்னுள் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறாய்