குறுந்தொகை குறிஞ்சித்திணை 142 வது பாடல்
பாடல் காட்சி
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்
தோழியிடம் தலைவன் கூறுவதாக வருவது , அதிகம் வராத காட்சியாக இருக்கிறது , இந்தப் பாட்டில் வருகிறது , தொடர்ந்து படித்தால் மற்ற பாட்டுகளில் வரலாம்
இப்படலை எழுதியவர் : கபிலர்
விளக்கம்
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
நாலாவது வரியில் இருந்து இந்த பாட்டை பார்ப்போம்
பானாள் பள்ளி யானையின் உயிர்த்து -
பானாள் - நடு யாமத்துப்
பள்ளி யானையின் - படுத்துத் துயிலுதலையுடைய யானையைப் போலப்
உயிர்த்து - பெருமூச்சு விட்டுக்கொண்டு
என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே
என் உள்ளம் - எனது நெஞ்சம்,
பின்னும் - நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும்
தன் உழையதுவே - அவளிடத்திலே இருக்கின்றது; தலைவி கிட்ட இருக்கிறது
அந்த தலைவி எப்படி பட்டவங்கனு விளக்கறாங்க பாருங்க
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
சுனைப்பூக் குற்றுத் - சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து,
தொடலை தைஇ - - மாலையைக் கட்டி
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
புனக் கிளி கடியும் -
புனம் - மலையில் இருக்கிற கொல்லை , தோட்டம்,
கிளி கடியும் -கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை ஓட்டுகின்ற ,
பூங் கட் பேதை
பூவைப் போன்ற கண்ணையுடைய பேதையாகிய அத்தலைவி
தான் அறிந்தன்றோ இலளே -
இதனை அறிந்தாளோ இல்லையோ!
என் மனது யானை மாதிரி அவள் இருக்குமிடத்திலயே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா , தெரியாதா , அப்படினு தோழிகிட்ட குறை சொல்வதுதான் இந்தப் பாடல்
பாடல் மறுபடியும்
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!